தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி…!எதிர்பாராத வகையில் பொருளாளராக விஜயகாந்த் அறிவித்துவிட்டார்…!பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கிடைத்துள்ளது என்று தேமுதிக ‘பொருளாளர்’ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நல்ல நடிகர் ஆவார்.இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இதன் பின் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார்.இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆவார் .இவரும் விஜயகாந்துடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒரு மனதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.இதுவரை எந்த பதவியும் வகிக்காத நிலையில் தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டார்.அதேபோல் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்முறையாக அவருக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் விஜயகாந்த் இதுவரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்நிலையில் பொருளாளராக நியமனம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், எதிர்பாராத வகையில், பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார்.அதேபோல் தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறினார்கள்.அதேபோல் பல காலமாக சபரிமலையில் கடைபிடித்து வரும் நடைமுறைகளை மாற்றக்கூடாது.எந்த ஒரு மதத்தின் கொள்கையையும் உடைப்பதில் தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லை.ஜாதி, மத அடிப்படையில் மனித குலத்தை பிரிக்கக் கூடாது என்றும் தேமுதிக ‘பொருளாளர்’ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.