தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு.. உயர்நீதிமன்றம்..!
இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், போயஸ் தோட்ட வேதா நிலைய வீடு எனது பாட்டியால் வாங்கப்பட்டது. அந்த வீட்டை எனது அத்தைக்கு உயில் எழுதி என் பாட்டி வைத்தார்.
எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுககள் இந்த இல்லத்தில் தான் நடைபெற்றது. இதனால், வேதா நிலைய வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதும் அரசு அறிவிப்பை ரத்து செய்து,வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்ற கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகிய இரு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபா தொடர்ந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. மனு பட்டியலிட்ட பின் இரண்டு வழக்கையும் விசாரிப்பதாக கூறி வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.