வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது – மு.க.ஸ்டாலின் உரை!!

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin Speech - 18

சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அவர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.

அதன் பின், இன்று காலை சென்னையில் நிதிக்குழு தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், “பல முக்கியமான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் தான் இருக்கிறது.

15வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மாநில வரிவருவாய் பங்கை 41% உயர்த்தியது மகிழ்ச்சி தான். மேலும், அறிவிப்புக்கு மாறாக 33.16% மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது ஒன்றிய அரசு. வரி பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டும்.

ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்குச் சுமை ஏற்படுகிறது. தற்போதைய வரிப்பகிர்வு முறை தமிழகத்தைத் தண்டிப்பது போல இருக்கிறது. ஒன்றிய வருவாய்வில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50% ஆக அதிகரிக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு 50% நிதி ஆணைக்குழு உறுதி செய்திடும் என்று நம்புகிறேன். தமிழகத்திற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் அது பாதிக்கும்.

கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்குத் தொடர்ந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்பு வசதிகள் பெருமளவு சேதமடைகின்றன. பேரிடர் துயர் துடைப்பு பணிக்காக உரிய நிதியை வழங்க நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்.

சமூக நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்கவும் பரிந்துரை செய்ய வேண்டும். நாட்டிலேயே அதிக வயதானவர்கள் இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிதிக்குழு தீர்வு காணும் என நம்புகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

16வது நிதிக்குழு பரிந்துரைகள் அனைத்து மாநில தேவை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன். நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் இந்தியா உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாறும் என நம்புகிறேன்”, என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்