வங்கி அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடு குறைப்பை கண்டித்து, விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வங்கி தேர்வில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக, எஸ்சி எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை மத்திய பாஜக அரசு பரித்துள்ளது. வங்கித்துறையில் நடந்திருக்கும் இந்த மோசடியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடுமையாக கண்டிப்பதுடன், நாளை காலை 11 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
மேலும் 50 சதவீதத்தை பொதுவில் தக்கவைத்துக்கொண்டு நலிவடைந்தோரின் இட ஒதுக்கீட்டில் கை வைத்திருப்பது திட்டமிட்ட சதி எனவும், மோடி அரசின் சமூக நீதிக்கு எதிரான செயல் திட்டங்களில் ஒன்று தான் இது எனவும், இவ்வாறு படிப்படியாக இட ஒதுக்கீடு முறையை இல்லாமல் ஆக்குவதுதான் அவர்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மட்டுமல்லாமல், மற்ற ஜனநாயக கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…