நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல் – மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது.இதன் காரணமாக கல்விக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.எனவே தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது .இதனிடையே தான் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரோனா வைரஸ் காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்? ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் –ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும். மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.