அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அனுமதி.
பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில் அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
பால்க் விரிகுடா இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற கடல் ஆகும்.பால்க் விரிகுடா அதன் சுற்றுச்சூழலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அனைத்து முக்கிய குழுக்களையும் கொண்ட பல்லுயிர் வளமாக உள்ளது.
அதில்,முதன்மை இனமாக டுகோங்(கடற்பசு) உள்ளது.ஆனால்,கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் போன்ற காரணத்தால் தற்போது அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இதனால்,தமிழகத்தில் அழிந்து வரும் கடல் பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடா, பால்க் விரிகுடா “டுகோங் (கடல் பசு) பாதுகாப்புக் காப்பகம்” நிறுவப்படும் என்று கடந்த 03.09.2021 அன்று வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…