தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் உருவாக்க முடிவு – முதல்வர் பழனிசாமி

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் உருவாக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்த பேசினார் அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தினமும் 85,000 கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். அதில், மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் பணியாற்றுவர்கள் என்றார்.