12ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 32 பேரின் முடிவுகளை வெளியிட திட்டம்.!

12th exam

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.

ஆனல், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களில் 32 பேரின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக, ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கல்வித்துறை குழு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கையை சமர்பித்த நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டு 2 பேரை தவிர, மீதமுள்ள 32 மாணவர்களின் தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்