தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே-7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறுகையில், அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதற்கு தடுக்கவே, டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…