120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் !
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி 120 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வருகிற நாட்களில் 120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மழையால் உயர்ந்துள்ள தக்காளியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தான் உழவர் சந்தை திறக்கப்பட உள்ளதாகவும், பொருட்கள் உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.