கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்த மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் மளிகைகடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. எனவே போலீசார் இதனை தடுக்க தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பல சோதனைகளில் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்கள் அந்தந்த சார்பு நீதிமன்றங்களில் வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மதுபாட்டில்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனை முறையாக அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…