11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்

11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முடிவு செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளது.
இதிலிருந்து 3 ஆண்டு காலம் விதி விலக்கு கோரப்பட்டுள்ளது. மாணவா்களின் திறன் மேம்பாடுகளை மேம்படுத்தியதற்கு பிறகு அது குறித்து பரிசீலனை செய்யப்படும் .தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும், இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
11,12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5ஆக குறைக்க முதல்வருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025