கடன் தள்ளுபடி செய்தால் வாழ்க்கை தரம் உயராது… மோடி கருத்து…!!
இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார்.
பிரதமர் திருப்பூரில் பேசுகையில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயராது . அதே நேரத்தில் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்குவதன் மூலம் 10 ஆண்டுகளில் பத்தாண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.