திருவாரூர் மாவட்டம், ஐயனார் கோவிலை சேந்தவர் ஐயப்பன் இவருடைய மனைவி தனலெட்சுமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்கள்உள்ளனர் , இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளனர், அப்பொழுது வீடுகட்ட தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி மாதம் மாதம் பணம் கட்டி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் ஐயப்பன் வேலைக்கு செல்லமுடியாமல் இருந்ததால் அந்த பெண் தினமும் செலவிற்கு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், மேலும் வாங்கியக்கடனை செலுத்தமுடியாமல் தனலெட்சுமி பரிதவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடன் நெருக்கடியை தாங்கமுடியாத தனலெட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார், இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைத்துள்ளனர், மேலும் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 80 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தனலட்சு மியிடம் வாக்குமூலம் வாங்கி உள்ளனர், இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் வங்கிக் கடன்களை வசூலிக்க கட்டாயப் படுத்தக் கூடாது என்று தமிழக அரசு கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…