மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து – அரசாணை வெளியீடு…!

Published by
Rebekal

மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்டம் 20212022 இல், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 2021-2022ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டபடி பார்வையில் படிக்கப்பட்ட கடிதங்களில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்கள், தமிழ்நாட்டில், மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் பெரும்பலநோக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து திரட்டும் குறுகிய கால வைப்புத் தொகைகளிலிருந்தும், சங்கங்களின் சொந்த நிதியிலிருந்தும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்றும் 11.50% வரையிலான வட்டி விகிதத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குகின்றன என்றும், 3103.2021 அன்றுள்ளபடி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் நிலுவை ரூ.2755.99 கோடியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிலுவைத் தொகை ரூ.2,755.99 கோடியில், அசல் தொகை (Prinicipal Amount) மட்டுமே ரூ.2459.57 கோடி உள்ளது என்றும், இந்த அசல் தொகையில், கூட்டுறவு நிறுவனங்களின் சொந்த நிதியிலிருந்து, ரூ.1,09247 கோடியும், உயர் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து (தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி. நபார்டு. டாம்கோ, டாப்செட்கோ போன்றவை) ரூ.1.367:10 கோடி கடன் பெற்று சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் நிலுவைத் தொகை ரூ.2755.99 கோடியை தள்ளுபடி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகையினை ஒரே தவணையில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்குமாறும். 01.04.2021 முதல் அரசாணை வெளியிடப்படும் நாள் வரையிலான மேற்படி தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக் கடன்களுக்கான வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உள்ளிட்ட நிலுவைத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கிடுமாறும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்காணும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களில் 31.03.2021 அன்றைய தேதியில் உள்ள நிலுவைத் தொகையில், அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தவிர்த்து, அசல் தொகையான ரூ.2459.57 கோடியும் மற்றும் வட்டி தொகையான ரூ.215.07 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.2674.64 கோடியை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்குகிறது. இதில், முதற்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ.600 கோடி விடுவிக்கவும், மீதமுள்ள தொகை 7% வட்டியுடன் நான்கு ஆண்டுகளில் இணைப்பில் உள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு விடுவிக்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது.

மேலே பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும். 2235- சமூகப் பாதுகாப்பும் நலனும் 02 சமூக நலன் – 103 மகளிர் நலன் மாநிலச் செலவினங்கள் BU கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து மகளிர் சுய உதவி குழுக்களால் பெறப்பட்ட கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதற்கான உதவித் தொகை – 309 உதவித் தொகை 03 குறிப்பிட்டதிட்டங்களுக்கான உதவித் தொகை.

இவ்வாணை நிதித்துறையின் ஒத்திசைவுடன், அத் துறையின் அ.சா.கு. எண்.107, DS(B)/2021, நாள் 03.12.2021 -இன்படி வெளியிடப்படுகிறது.

Recent Posts

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…

1 hour ago

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…

2 hours ago

லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…

3 hours ago

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…

3 hours ago

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

3 hours ago

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

4 hours ago