பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…!

Default Image

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம். 

சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 13-ம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் தமிழகத்தில் முதல் முறையாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. 4 நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19-ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதிலுரையாற்றுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala