பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வு.!

விருதுநகர் பட்டாசு அலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சகுளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 33 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.