தமிழகத்தில் உயிரிழப்பு 12 ஆக உயர்வு.!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த 95 வயது முதியவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.முதியவர் உயிரிழந்ததை கரூர் ஆட்சியர் அன்பழகன் உறுதி செய்துள்ளார். மேலும் அந்த முதியவரின் உடல் அரசு விதிமுறைகளின்படி உடல் தகனம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த தகவலை சுகாதார துறை அறிவிக்கவில்லை.