காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் இறந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.
சென்னை தலைமை செயலக காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலக காலனி காவலர்களுக்கு எதிரான வழக்கில் 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது.
இதில், தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், எஸ்எஸ்ஐ குமார், ஊர்காவல்படை தீபக், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன்ராம் மற்றும் சந்திரகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்களாகியுள்ளது.
மேலும், சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்கள் இடன்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்ததாக விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…