பிரகாஷ் சிங் பாதல் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 95 வயதான மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இறங்கி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குறிப்பில், 5 முறை பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மறைவு வருத்தமளிக்கிறது. மறைந்த பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the demise of veteran leader and five-time CM of Punjab Thiru. Parkash Singh Badal. His rich contributions to Indian polity & Punjab’s welfare will always be etched in our memories.
Deepest condolences to his bereaved family & admirers. pic.twitter.com/ikEfSy2LTB
— M.K.Stalin (@mkstalin) April 26, 2023
2 நாள் துக்க அனுசரிப்பு:
இவரது, ஒரு தேசிய அரசியல் தலைவரின் இழப்பாக இவரது மறைவு பார்க்கப்படுகிறது. இவரது மறைவு காரணமாக நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்கப்படுகிறது என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.