சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது, கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.
அந்த வகையில், சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து, மீண்டு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார். எனினும் மீண்டும்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்போது உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…