திருவண்ணாமலையில் மகா தீபக் கொப்பரை இறக்கம்!
திருவண்ணாமலையில், 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் 11 நாட்களாக காட்சியளித்த மகா தீப கொப்பரை இறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து, 2,668 அடி உயர மலை உச்சியில் 11 நாட்களாக காட்சியளித்த மகா தீப கொப்பரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.