KU.KA Selvam MKStalin [file image]
மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க.செல்வம், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
கு.க.செல்வம் திமுகவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், அவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் கூறியிருந்தார். அதோடு, முதல் ஆளாக கு.க.செல்வம் வீட்டிற்கு மனைவியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, மறைந்த கு.க.செல்வம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
லாரி மோதி தீ விபத்து: கொளுந்துவிட்டு எறிந்த மேம்பாலம்…வானத்தில் கிளம்பிய கரும்புகை காட்சி.!
அஞ்சலி செலுத்தும் பொழுது, முதல்வருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. த. வேலு, ஜெ. கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…