பிரபல மருத்துவர் கே.வி திருவேங்கடம் மறைவு – முதல்வர் பழனிசாமி இரங்கல்

Default Image

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல மருத்துவர் திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார்.

தி.நகரில் தங்கி இருந்த திருவேங்கடம் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில், இவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், பிரபல மருத்துவர், மருத்துவ துறையில் பேராசிரியராக வும் பணியாற்றிய மருத்துவர் கே.வி திருவேங்கடம் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 3.10.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்

மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக சுமார் வருடங்கள் பணியாற்றியவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினராக்கவும் பணியாற்றியவர். மத்திய அரசு இவரது சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது இதுமட்டுமின்றி சிறந்த மருத்துவ பேராசிரியருக்கான டாக்டர் பி.சி ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சொந்தக்காரர் மருத்துவர் திருவேங்கடம் அவர்கள், தனது கடின உழைப்பாலும், திறமையானலும் மருத்துவத் துறையில் தனி முத்திரை பதித்தவர்.

அன்னாரின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பாகும் மருத்துவர் திருவேங்கடம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மருத்துவ துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி அவரது நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்