சிறுவன் புகழேந்தி மரணம் : ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்! – சீமான்

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இதனையடுத்து, சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், 5 நாட்களாக சிகிக்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி நேற்று இரவு சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதுக்கோட்டை மாவட்டம். பசுமலைப்பட்டியிலுள்ள காவலர் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது கவனக்குறைவால் அருகில் இருந்த குடியிருப்பில் இருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அச்சிறுவன் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். சிறு வயது பிள்ளையைப் பறிகொடுத்து பரிதவிக்கும் பெற்றோருக்கு எனது ஆறுதலை தெரிவித்து அவர்களது ஆற்ற முடியா துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கிராம மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் மிகவும் பாதுகாப்பில்லாத வகையில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டுமென்றும். இனி இதுபோன்ற துயரநிகழ்வுகள் வேறெங்கும் நிகழா வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்றும். அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கி துயர் போக்கவேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்!https://t.co/kiVPz2Id4O pic.twitter.com/GJkSGD9R1T
— சீமான் (@SeemanOfficial) January 4, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025