நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு – முதல்வர், ஈபிஎஸ் ஆகியோர் இரங்கல்!
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல்
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகரில் இன்று காலை நடைபெறுகிறது.
இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்