மது கிடைக்காததால் சேவிங்க் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு…ஒருவர் கவலைக்கிடம்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு கொரோனா பரவும் வேகத்தை சற்று குறைத்துள்ளது எனலாம். உலக வல்லரசான அமெரிக்கா மற்றும் இத்தாலியின் நிலையை காட்டிலும் மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிப்பதால் தொற்றின் வேகம் அதிகரிக்கவில்லை என்கின்றனர் பன்னாட்டு ஆய்வாளர்கள். இந்நிலையில் தமிழகத்திலும் ஊரடாங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி, பேருந்து, ரயில் என மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. இதில் டாஸ்மாக்களும் அடங்கும். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் என்ற ஊரில் வசிக்கும் மைதின், அருண், அன்வர் ஆகிய மூன்று நபர்களும் மதுப்பழக்கம் உடையவர்கள். இவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மூவரும் சேவிங் செய்த பின் முகத்தில் தடவ பயன்படும் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். இதில் மைதின் , அருண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனையில் அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுப்பழக்கத்தால் இருவர் உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.