பிரதமர் மோடி அவர்களே..! நீங்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – திருமாவளவன்
மீண்டும் மோடி பிரதமரானால், இந்திய தேசத்தை காப்பாற்ற இயலாது. இது மிகப்பெரிய எச்சரிக்கை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நவம்பர்08-தேசியப் பொருளாதார பேரிடர் நாள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை நிலைகுலைய வைத்த நாள்.
பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றியதாக, தவறான பொருளாதார கொள்கை எடுத்ததற்காக, இந்த தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதத்தை சரிய செய்ததற்காக, அப்பாவி ஏழை, எளிய மக்கள் வங்கியின் வாசலில் காத்திருந்து உயிரிழக்க நேரிட்டது உள்ளிட்டவற்றிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனவே, மீண்டும் மோடி பிரதமரானால், இந்திய தேசத்தை காப்பாற்ற இயலாது. இது மிகப்பெரிய எச்சரிக்கை. மோடி மிக மோசமான சர்வாதிகார போக்குள்ளவராக, வரலாற்றில் தான் இடம் பெற வேண்டும் என்ற ஒரு வெறி பிடித்தவராக அவரது செயல்பாடுகள் அமையும். இது மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
நவம்பர்08-தேசியப் பொருளாதார பேரிடர் நாள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை நிலைகுலைய வைத்த நாள். அமைச்சரவை ஒப்புதலோ நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலோ இன்றி 500ரூ, 1000ரூ தாள்கள் செல்லாதென எதேச்சதிகாரமாக பிரதமர் முடிவெடுத்த நாள். pic.twitter.com/elpTwNGNMl
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 8, 2021