மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே, எங்கள் வீரவரலாற்றை, விடுதலைப்போரில் எமது தலைவர்களின் மகத்தான பங்களிப்பை, தியாகத்தை நாங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்துவோம். உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் இந்த ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஊர்தி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே, எங்கள் வீரவரலாற்றை, விடுதலைப்போரில் எமது தலைவர்களின் மகத்தான பங்களிப்பை, தியாகத்தை நாங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்துவோம். உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது. விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு துணைநின்ற உங்கள் சித்தாந்தம் விரைவில் வேரறுக்கப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…