#BREAKING : அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் விரைந்து குணமடைய விழைகிறேன்: முதல்வர் ட்வீட்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அன்பு நண்பர் கலைஞானி @ikamalhaasan அவர்கள் #COVID19 தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன். https://t.co/OSIT3JH961
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021