தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வியாபாரியின் அதிரடி ஆ ஃபர்! 1கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது அந்த வகையில், சென்னையிலும் இந்த வருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீருக்காக மக்கள் அலைந்து திரிவதை கண்டா மாவு கடை வியாபாரி ஒருவர், அதிரடியாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எல்லம்மன் மாவு கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, தண்ணீருக்காக சென்னை மக்கள் படும் அவதிகளை கருத்தில் கொண்டு, ” ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம்” என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளார். இவரது அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில், தனியார் லாரிகள் மூலம் தான் தண்ணீர் பெற்று, சிரமத்தின் மத்தியில் இந்த சேவையை செய்து வருவதாகவும், இது தங்களுக்கு விவியாபாரம் சார்ந்தது மட்டுமல்லாமல், சென்னையின் எதிர்காலம் சார்ந்த ஒரு பிரச்னை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இது தற்காலிகமானது தான். இது தொடராக கூடாது என்றும் கிருஷ்ணமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)