குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன!
உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு எடுத்து வரப்பட்டன.தேனி குரங்கணி தீ விபத்தில் கவுந்தப்பாடி அருகே மகாத்மா நகரைச் சேர்ந்த விவேக், அவரின் நண்பர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஈரோடு மாவட்டம் வட்டக்கல்வலசை சேர்ந்த திவ்யா ஆகியோர் உயிரிழந்தவர்கள்.
இவர்களின் உடல்கள் நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு எடுத்து வரப்பட்டன. விவேக் மற்றும் தமிழ்ச்செல்வன் உடல்களுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உறவினர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல்கள் இன்று அடக்கம் செய்யப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.