கொடூரம்: முண்டமாக கிடந்த சடலம்.! தலையை தனியாக வெட்டி எடுத்து சென்ற கொலையாளி.!

Default Image

மதுரை மாவட்டம் அவனியபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் தலையில்லாமல் பிரேதத்தை கண்ட நாய் குறைத்து கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அங்கு இருந்த இளைஞர் உடல் தலை இல்லாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில் முதற்கட்ட விசாரணையில், சிலர் மது அருந்துவதற்கு இந்த பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும், அப்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

பின்னர் கொலை செய்து விட்டு தலையை எடுத்து செல்வது முன்விரோதம் காரணமாக இதுபோன்று நடந்திருக்கலாம் எனவும் தற்போது வரை கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை என கூறினர். இதை தொடர்ந்து தடவியல் துறை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை செய்யப்பட்ட கொலையாளி மற்றும் இளைஞரின் தலை எங்கே என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்