அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சகோதரர் பாஸ்கரன் புதிதாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.அதேபோல் அண்ணா திராவிடர் கழக என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கட்சி ஒன்றைஆரம்பித்தார்.இதற்கு திவாகரன் பொதுச்செயலாளர் ஆவார்.
இந்நிலையில் தற்போது டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ் (எ) பாஸ்கரன் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இவர் தினகரனின் தம்பி ஆவார்.இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.சென்னை நீலாங்கரை புளூ பீச் சாலையில் உள்ள அவரது வீட்டில் புதிய கட்சியை துவங்கி பாஸ்கரன் கொடியை அறிமுகம் செய்தார்.அதேபோல் கட்சிக்கு அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என்று பெயர் வைத்துள்ளார்.அதற்கு பொதுச்செயலாளர் பாஸ் (எ) பாஸ்கரன் ஆவார்.அதேபோல் கட்சி கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு வண்ணத்தில், நடுவில் எம்ஜிஆர் படம் இருக்கிறது.
இதன் பின்னர் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழக பொதுச்செயலாளர் பாஸ் (எ) பாஸ்கரன் கூறுகையில், எம்ஜிஆர் அண்ணா வழியில் ஊழலற்ற நிலையான ஆட்சியைத் தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர் தொண்டர்களை ஓன்று சேர்த்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன். மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவிற்க்காக பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழக பொதுச்செயலாளர் பாஸ் (எ) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சசிகலாவின் சகோதரர் திவாகரன் தினகரன் கட்சி தொடங்கியது பிடிக்காமல் தான் தனியாக கட்சி ஆரம்பித்தார்.இந்நிலையில் தினகரனின் சகோதரரும் கட்சி ஆரம்பித்திருப்பது தினகரனுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…