காதல் திருமணம் செய்து கொண்ட மகள்.. தற்கொலை செய்து கொண்ட தந்தை..!
தென்காசி மாவட்டம் ஆலங்குடி பேச்சியம்மன் தெருவில் வசித்து வந்தவர் மாயாண்டி இவர் அப்பகுதியில் பனை தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்கள் ஏற்கனவே வேறு சமூகத்தினருடன் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும் இதனால் மாயாண்டி மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும் இந்நிலையில் அவரது மூன்றாவது மகளும் உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார், அந்த காதல் மாயாண்டி தெரியவந்து மாயாண்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதனை சிறிது கூட கவனிக்காமல் மூன்றாவது மகனும் கடந்த 28 தேதி வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த மாயாண்டி அன்று மதியமே பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார், இதனை கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
மேலும் ஆனால் சிகிச்சை பலனின்றி மாயாண்டி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.