கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
சசிகலாவுக்கு திருமணமான நிலையில், வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு உறவு வைத்திருந்தார்.சசிகலா, மருத்துவமனை செல்லும்போதும், பணி முடிந்து திரும்பும்போதும் அவரை பைக்கில் ஏற்றி செல்வார் ராஜா.
மகளின் இந்த கள்ளத்தொடர்பு குறித்து தெரிந்து கொண்ட அவரது அப்பா தொப்பக்கவுண்டர், சசிகலாவை கண்டித்துள்ளார். ஆனால், தந்தையின் பேச்சை சசிகலா கேட்காமல், ராஜாவுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், சசிகலாவின் தந்தை தொப்பக்கவுண்டர், சசிகலாவை மிரட்டியுள்ளார்.
இதில் கோபமடைந்த சசிகலாவும், அவரது கள்ளக்காதலனும், தொப்பக்கவுண்டரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு வீராணத்தில் உள்ள ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகிய ரவுடிகளின் துணையோடு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தொப்பக்கவுண்டரை சரமாரியாக வெட்டி கெலை செய்தனர்.
தொப்பக்கவுண்டர் கொலை செய்யப்பட்டது குறித்து வீராணம், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தவழக்கு சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில், சசிகலா, ராஜா, ஸ்டீபன், ராஜா, மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.
DINASUVADU
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…