மகள் வீட்டில் ரெய்டு: நாங்க பணக்காட்டு நரி.. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – முக ஸ்டாலின்

Default Image

வருமானவரி சோதனையை கண்டு நானும் அஞ்சமாட்டேன், திமுகவும் அஞ்சாது என பரப்புரையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கல்விக்காக தன் உயிரை நீத்தவர் அனிதா என்று பேசிய பின்னர், அனிதா அகாடமி தொடங்கி பல்வேறு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைகள் பெற்று தந்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக அரசை இன்றைக்கு காப்பாற்றிக்கொண்டிருப்பது பாஜகவின் மோடி அரசு. ஏற்கனவே, அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி, அந்த கட்சியை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்.

அதனால், தமிழகத்தின் உரிமைகள் எல்லாத்தையும் பறித்துள்ளார்கள். ஐடி, சிபிஐ வைத்து எல்லாத்தையும் மிரட்டி வருகிறார்கள். ஓன்று மட்டும் மோடிக்கு சொல்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், இது திமுக மறைத்துவிடாதீங்க என கூறியுள்ளார். கலைஞரின் மகன், இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன். மிசாவையே பார்த்தவன் தான் இந்த ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

எத்தனை ரெய்டு நடத்தினாலும், கவலைப்படமாட்டோம். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், எப்படியாவது அச்சுறுத்தி வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இது திமுகவிடம் நடக்காது என கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுவிடம் நடக்கும், உங்கள் காலில் விழுந்து கிடக்கலாம், ஆனா, நாங்க பணக்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என கூறியுள்ளார்.

வருமானவரி சோதனையை கண்டு நானும் அஞ்சமாட்டேன், திமுகவும் அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போன்று, திமுகவை மிரட்ட முடியாது. ஆகையால்,வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். ஒரு இடம் கூட அதிமுக வெற்றி பெற கூடாது, அப்படி வெற்றி பெற்றால், அது அதிமுக கிடையாது, மத்திய பாஜக என பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்