ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகள் வெளியீடு!
ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமாகிய இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரி ஹரி ஹோட்டவிலிருந்து சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை அனுப்பி இருந்தது. பல்வேறு விதமான பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்கியது. இதனை அடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், செப்டம்பர் 7-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தபடி சந்திராயன் விண்கலத்தின் லேண்டார் நிலவில் தரையிறங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் இந்த லேண்டர் தரை இறங்கவில்லை எனவும், வேகமாக சென்று இது நிலவின் தரையில் மோதியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டு காலமாக அனுப்பப்பட்டிருந்த சந்திராயனின் ஆர்பிட்டார் நிலவை சுற்றி வந்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகளுக்கான தரவுகளை வருடாந்திர அறிக்கையாக கடந்த மார்ச்சில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக ராக்கெட் ஏவுதல் மற்றும் ஆய்வு பணிகள் தடைபட்டதால் இந்த அறிக்கையை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திராயன் 2 விண்கலத்தின் அறிவியல் தரவுகள் கொண்ட தொகுப்பறிக்கையை இஸ்ரோ நிறுவனம் https://www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், எக்ஸ்ரேஸ்பெக்ட்ரோமீட்டர், சிந்தடிக் அப்ரேச்சர், 3D கேமராக்கள் போன்ற 8 விதமான ஆய்வு சாதனங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற படங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஆர்பிட்டார் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நமது பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்து வருவதாகவும் இஸ்ரோ சார்பில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.