தனது ஆன்மீக சேவைக்கு ஆபத்து – போலீசில் புகாரளித்த அன்னபூரணி அரசு!

உயிருக்கு ஆபத்து என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் புகார்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஆதிபராசக்தியின் மறு உருவம் என தன்னை கூறிக்கொள்ளும் பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், எனது ஆன்மிக சேவை குறித்து இணையதளத்தில் தவறா தகவல்கள் பரப்புகின்றன.
இதனால் எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம் என வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், என்னை பற்றி அவதூறு பரப்பி, எனது ஆன்மீக சேவையை தடுக்க பார்க்கிறார்கள் என்றும் வாட்ஸ் அப் மற்றும் செல்போன்கள் மூலம் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025