திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி – பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த தமிழாண்டு டிஜிபி வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி பரிசீலிக்க நீதிமன்றம் ஆணை.
திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி வெளியிட்ட வாலிமுக்குறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட காவல்துறை மனுக்களை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் மற்றும் நடன, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டடுள்ளது. மதுரை, திண்டுக்கல், ராமநாதாபுரம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். திருவிழாக்கள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையும், நீதிமன்றமும் ஏற்கனவே விதித்துள்ளது.
திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதி அளிக்க கூடாது. அதனை தடுக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும். சாதி பாடல்களை ஒலிபரப்பக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றி பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.