நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவு – முதல்வர் ட்வீட்

Default Image

நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்.

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நிலையில், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு  காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில், ‘கலைஞரின் உளியின் ஓசை, பூவே உனக்காக உள்ளிட்ட படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் விருது, மகதீரா திரைப்படத்தில் பணியாற்றி தேசிய விருது எனப் பல விருதுகளை வென்றவரும்; தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தவருமான சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் என்றே நம்பியிருந்த நிலையில் அவர் உயிரிழந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis
Vidamuyarchi Online Review