ஆடல், பாடல் நிகழ்ச்சி..! தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் – ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்று உத்தரவு.
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு கிராம மக்கள் சார்பாக அனுமதி கோரினால், தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது. ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை, அலைய விடக்கூடாது என்றும் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்து, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.