ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் – கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நீதிமன்றம்..!

Default Image

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில்,  இரவு நேரத்தில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிகோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி சக்திகுமார் இந்த மனுக்களை விசாரித்த நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தாத கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி விதித்த நிபந்தனைகளின் படி,

  • ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இடம்பெறக்கூடாது.
  • அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது.
  • அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
  • இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது.
  • நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது.
  • பொதுமக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
  • நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்