பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் பிற்பகலுக்குள் சரி செய்யப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
பாதுகாப்பு கருதி 10 துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி 10 துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் 11 ஆயிரம் பேரும், சென்னையில் மட்டும் 1100 மின் பணியாளர்கள் காலை முதல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. பிற்பகலுக்குள் மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் பிற்பகலுக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.