மழையால் நெற்பயிர் சேதம்- திருவாரூரில் மத்திய குழு ஆய்வு..!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.
விவசாயிகள் தரப்பில் 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். தமிழக முதல்வரும், 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.
மத்திய குழு ஆய்வு
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாகை, மயிலாடுதுறையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.