கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள்…!ஆய்வறிக்கை நவம்பர் 27 ஆம் தேதி பிறகு மத்திய அரசிடம் தாக்கல் …!
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவம்பர் 27 ஆம் தேதி பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்த டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை தனியார் ஓட்டலில் பேரிடர் நிர்வாக ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின் தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இன்று மாலை முதற்கட்ட ஆய்வை தொடங்குகிறது மத்தியக்குழு. தஞ்சையில் புயல் சேதத்தை இன்று இரவு ஆய்வு செய்கிறது . நாளை மீண்டும் தஞ்சையில் ஆய்வு செய்கிறது மத்தியக்குழு.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நாளை மாலை ஆய்வு செய்கிறது மத்தியக்குழு. திங்கள் காலை நாகையில் ஆய்வு செய்கிறது. திங்கள் பிற்பகல் காரைக்காலிலும், மாலையில் புதுச்சேரியிலும் ஒரே குழுவாக சாலைமார்க்கமாக ஆய்வு செய்கிறது மத்தியக்குழு.
அதேபோல் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவம்பர் 27 ஆம் தேதி பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று புயல் சேத ஆய்வறிக்கை குறித்து மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.