நெல்லை மாவட்டத்தில் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Default Image

மாலத்தீவு பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விடியவிடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக குற்றலாம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்பறித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி பாபநாசம் காரையார் அணையின் தற்போதைய நீர்மட்டம் 32 அடியாகவும், நீர்வரத்து 2642.34 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 356 கனஅடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையின் தற்போதைய நீர்மட்டம் 49.54 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 83.52 அடி, நீர் வரத்து 110 கனஅடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 110 கனஅடியாக உள்ளது. கடனாநதி அணையின் தற்போதைய நீர்மட்டம் 55 அடி, நீர் வரத்து 627 கனஅடி, வெளியேற்றப்படும் நீரின் அளவு 25 கனஅடி, இராம நதி அணையின் இன்றைய நீர்மட்டம் 35 அடியாகவும், நீர் வரத்து 62.50 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 5 கனஅடியாகவும் உள்ளது. மழை காரணமாக அணைகளில் நீர்மட்டடம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்