காலமானார் தமிழகத்தை சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை… தமிழக முதல்வர் இரங்கல்…..

Published by
Kaliraj

கடந்த 1998ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று  வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் தலித் எழில்மலை ஆவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் பிறந்தார்.  இவர்  இந்திய ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 1989-ல் பாமக தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார். அப்போது பாமகவின் முதல் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்,  1998-ல் அதிமுக – பாஜக கூட்டணியில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

   பின், 1999-ல் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.  பின், கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற  திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். பின், 2004-க்குப் பிறகுஅரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில்   மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில்  தலித் எழில்மலையின் உடல் அவரது சொந்த ஊரான இரும்பேடு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவரது மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர், அதில்,  ‘அதிமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் திரு.தலித் எழில்மலை அவர்கள்  மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

7 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

46 minutes ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

3 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

4 hours ago