காலமானார் தமிழகத்தை சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை… தமிழக முதல்வர் இரங்கல்…..
கடந்த 1998ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் தலித் எழில்மலை ஆவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் பிறந்தார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 1989-ல் பாமக தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார். அப்போது பாமகவின் முதல் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின், 1998-ல் அதிமுக – பாஜக கூட்டணியில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
பின், 1999-ல் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின், கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். பின், 2004-க்குப் பிறகுஅரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் தலித் எழில்மலையின் உடல் அவரது சொந்த ஊரான இரும்பேடு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இவரது மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர், அதில், ‘அதிமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் திரு.தலித் எழில்மலை அவர்கள் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.