பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் பால்வளத்துறை அமைச்சர் – அண்ணாமலை
பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என அண்ணாமலை ட்வீட்.
ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு, லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விலையுயர்வுக்குறித்து விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், மத்திய அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வு என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் நாசர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்.
பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். (2/2)
— K.Annamalai (@annamalai_k) November 4, 2022